Contact:

Farm Location: Thambiranpatty-Village,Keelakanavai-Post,Perambalur-Dist,Pin:621104.
Mobile:9600026269

EMail:sureshgoatfarm@gmail.com

YouTube:http://www.youtube.com/user/SureshDevarajFarm?feature=watch

Kuthirai Masal(Alfalfa) Seeds,Super Napier,C04,Ear Tag,Velimasal Seeds,kalyana murungai seeds Available for Sales

-Thalassery,Boer goat Available For Sales
-Rabbit Available For Sales
- Kadaknath Available For Sales
-Country Chicken Eggs/Chicks Available For Sales
-Goat,Rabbit and Country Chicken Training at our farm
-Hydroponic and Silage Making Training
-Goat Farm Management software for Free
-Sample Record Keeping Excel Sheet Free
-Shed Construction
-Goat Farm CDs and Materials Available for Free(Pls send your email id i will share all my documents)

I'm available all day at the Farm

Saturday 20 May 2000

ஆட்டுக் குட்டிகளுக்கு பராமரிப்பு


ஆட்டுக் குட்டிகளுக்கு பராமரிப்பு அட்டவணை*


பிறந்த 3 வது நாளிலிருந்து 1 மாதம் வரை:
————————————————
BROTONE TONIC- 2ml
VIMERAL tonic -1ml
ஓமம் தண்ணீர்- 2Ml


2 ருந்து 3 மாதம் வரை:
——————————-
BROTONE -2ML/10kg body weight
VIMERAL- 1ML/ 10kg
OSSOMIN- 2ML/10kg
21 நாள்- ET தடுப்பூசி
4 வது வாரம் - Sulphadimidine மாத்திரை (கால் மாத்திரையில் பாதி)
42 நாள்- ET booster
45 நாள்- பேன் மருந்து குளியல் (Butox-2ml/1 litre water,1 வாரத்தில், 2 நாள் இடைவெளி
விட்டு 3 குளியல்)
7வது வாரம் - குடற்புழு நீக்கம் (Banminth 2ml/10 kg body weight)
8 வது வாரம் - பேன் மருந்து குளியல்
9 வது வாரம் - குடற்புழு நீக்கம் (Banminth)
10 வது வாரம்- பேன் மருந்து குளியல்
11வது வாரம்- குடற்புழு நீக்கம் (Albendasole- 2ml/10kg)
12 வது வாரம் - பேன் மருந்து குளியல்
13 வது வாரம்- PPR தடுப்பூசி
16 வது வாரம்- குடற்புழு நீக்கம் (NILZEN 2ml/10kg body weight)
17வது வாரம் - அம்மை தடுப்பூசி
21 வது வாரம் - குடற்புழு நீக்கம் (HITEK 2,l/10kg body weight)
22 வது வாரம்- ANTHROX தடுப்பூசி
இதன் பிறகு மாதம் தவறாமல் குடற்புழு நீக்கம், 1 வயது வரை கடைபிடிக்க
வேண்டும்.
1 வயதுக்கு மேல்
————————
3 மாதம் 1 முறை- குடற்புழு நீக்கம்
வருடத்திற்கு  1 முறை
ET தடுப்பூசி
PPR- ஏப்ரல்- மே மாதங்களில்
அம்மை தடுப்பூசி- ஜுன் - ஜூலை
HS. - செப்டம்பர்
FMD - அக்டோபர்


*ஆந்த்ராக்ஸ் தடுப்பபூசி* கட்டாயம் வருடம் ஒரு முறை போடவும்.
*எல்லா விவரங்களையும் பதிவேட்டில் பராமரிப்பது மிக மிக முக்கியம்*.
குறைந்த எடையில் பிறக்கும் குட்டிகளை பராமரிக்கும் வழிமுறைகள் :


குட்டி பிறந்து, நன்றாக எழுந்து நடக்கும்வரை உடலின் வெப்பநிலையை சிறிது
அதிகபடுத்த வேண்டும்.
குட்டியை சுத்தமான பருத்தி துணியால் சுற்றி, உயரம் குறைந்த
பிளாஸ்டிக் டப்பில் வைக்கோலால் மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி
அதில் குட்டியை படுக்க வைக்கலாம்.
இதன் விளைவாக குட்டிக்கு உடல் கதகதப்பு கூடி, உடலின் எதிர்ப்பு சக்தி மேம்படும்.


# தாயிடம் சுரக்கும் ஜெல் போன்ற சீம்பாலை சிறிது கூட வீணாக்காமல்
குட்டிக்கு தரவேண்டும்.இதனால் குட்டிகளின் வாழ்நாளில் உடலின்
எதிர்ப்புதிறன் மிக சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமில்லாமல் ஜீரண உறுப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் நன்கு தூண்டப்படும்.


# தாயிடம் பால் சுரப்பு குறைவாக இருந்தாலும், அதற்காக குட்டிகளை
தாயிடம் பால் குடிப்பதை நிறுத்த வேண்டாம்.
   குட்டிகளை பால் குடிக்க அனுமதியுங்கள். இது போன்ற செயல்பாடுகள்
குட்டி ஈன்ற ஆட்டின் தாய்மை உணர்வை தூண்டி நல்ல பால் சுரப்புக்கு வழிவகை செய்யும்.


# குட்டிகளின் பால் தேவையை பூர்த்தி செய்ய, மாட்டு பாலை தரலாம்.
மாட்டு பாலில் சம பங்கு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து,
ஆறிய பின் பால் புட்டிகளின் மூலம் புகட்டலாம்.
Lactogen போன்ற பெளடர் பாலையும் தரலாம்.


குட்டியின் முதல் நாள் ஒரு ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து 50 மில்லி வீதம்
நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நான்கு முறை தரவும்.


இரண்டாவது நாள் குளுக்கோஸ் உடன் 2-3 சொட்டுகள் Cod liver oil கலந்து
75 மில்லியாக 4 வேளை தரலாம்.


மூன்றாவது நாள், குளுக்கோஸ், Cod liver oil உடன் முட்டையின் வெள்ளை
கருவை கலந்து  110 மில்லியாக நான்கு வேளை தரவும்.


இதுபோல் படிப்படியாக பாலின் அளவை முதல் வார இறுதியில்
ஒரு வேளைக்கு 150 மில்லி வரை கூட்டலாம்.
# இரண்டாவது வாரத்தில் பாலின் அளவு வேளைக்கு 200 மில்லியாக
உயர்த்த வேண்டும்.
# மூன்றாவது வாரத்தில் 250
மில்லியாகவும், நான்காவது வாரத்தில் இதே அளவு பாலுடன்
சிறிது வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களும்,
அடர்தீவனம் 50 கிராம் அளவில் தரலாம்.
# ஐந்தாவது வாரத்திலிருந்து பாலின் அளவை 200 மில்லியாக குறைத்து
அடர்தீவனத்தை 100 கிராமாக கூட்டி தரமான பசுந்தீவனங்களையும்
அளிக்க வேண்டும்.
# ஆறாவது வாரத்தில் பாலை 150 மில்லியாக குறைத்து, அடர்தீவனம்
மற்றும் புரதம் நிறைந்த பசுந்தீவனங்களின் அளவை சேர்த்து த
தரவும்.
ஏழாவது வாரத்திலிருந்து பாலை முழுவதுமாக நிறுத்தி விடலாம்.


குட்டிக்கு டானிக்
Brotone -2ml
Vimeral -1ml
ஓமம் தண்ணீர் - 2ml
தினமும் ஒரு மாதம் வரை தரவும்.
மாலை வேளையில் தினமும் விளக்கெண்ணெய்யில் ஊறிய வசம்பை
நல்லெண்ணெய் விளக்கின் தீயில் சுட்டு சிறிது ஆட்டுபால் விட்டு இழைத்து,
அதை குட்டிகளின் வாயினுள் தடவி விடவும்.
இதனால் வயிற்றுவலி, மற்றும் கழிச்சல் ஆகிய பிரச்சனைகள் இல்லாமல்
குட்டிகளின் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படும்.

No comments:

Post a Comment