Contact:

Farm Location: Thambiranpatty-Village,Keelakanavai-Post,Perambalur-Dist,Pin:621104.
Mobile:9600026269

EMail:sureshgoatfarm@gmail.com

YouTube:http://www.youtube.com/user/SureshDevarajFarm?feature=watch

Kuthirai Masal(Alfalfa) Seeds,Super Napier,C04,Ear Tag,Velimasal Seeds,kalyana murungai seeds Available for Sales

-Thalassery,Boer goat Available For Sales
-Rabbit Available For Sales
- Kadaknath Available For Sales
-Country Chicken Eggs/Chicks Available For Sales
-Goat,Rabbit and Country Chicken Training at our farm
-Hydroponic and Silage Making Training
-Goat Farm Management software for Free
-Sample Record Keeping Excel Sheet Free
-Shed Construction
-Goat Farm CDs and Materials Available for Free(Pls send your email id i will share all my documents)

I'm available all day at the Farm

Sunday, 17 November 2013

ஜமுனாபாரி

பாலமேடு: பணம் கொட்டும் “ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானைபூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது.வளர்ந்த ஆட்டின் எடை 80 கிலோ இருக்கும். ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதகமாக கருதப்படுகிறது.
ஜமுனா பிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழி பிரியாணிக்கு தனி மவுசு உண்டு. இவ்வரிசையில் ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது. முன்னணி அசைவ உணவகங்களில் ஜமுனாபாரி மாமிச வகைகளும் இடம் பெறுகிறது. ஒரு கிலோதனிக்கறி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறியை விலைக்கு வாங்குவதை விட ஆட்டுக்குட்டிகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்ப்போருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடுபகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏற்றுமதிக்கு உகந்தது: ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்டஜமுனா ஆட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் வளர்க்கப்படும் ஆடுகள், சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆட்டின் கறியை பதப்படுத்தி “டின்’களில் அடைத்து ஏற்றுமதிசெய்கின்றனர். பண்டிகை காலங்களில் கறியும், பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் அதிக புரதச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலை கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாகவும்,நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் வளரும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
ஈத்துக்கு மூன்று குட்டி: பாலமேட்டை சேர்ந்த ஜமுனாபாரி பண்ணை மேலாளர் பட்டுராஜன், ஆடு வளர்க்கும் ராஜேந்திரன் (45) கூறும்போது, “”ஜமுனாபாரி ஆடுகள் ராஜஸ்தானில் அதிகளவு வளர்கிறது. அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால், இதில் நோய் எதிர்ப்பு அதிகம். கறியும், பாலும் வாரம் தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டைகுறைத்து ஆரோக்கியத்தை வளர்க்கும். ஒரு ஈத்துக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். 25 நாள் குட்டி ஒன்றின் விலை 6,000 ரூபாய். கருவுற்ற ஆட்டின் விலை 20 ஆயிரம் ரூபாய். பாசிப்பயறு, துவரை, உளுந்து தூசிமற்றும் கடலை புண்ணாக்கு உணவாக வைக்கப்படுகிறது. வியாபார நோக்கமின்றி சொந்த உபயோகத்துக்காக வளர்க்கிறோம்,” என்றார்.

ஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்

வான்கோழி, காடை, வென்பன்றி, முயல் கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும் நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை.மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்துவருவது ஆடு வளர்ப்புதான்.
ஏறத்தாழ நம் ஊர் வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம்குறைவு. முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த ஆடுகளின் காது, கண், கால் என்று சிலஇடங்களில் மட்டும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில்பரஸ்பரம் மாறி இருக்கின்றன.
ஆடுகளைக் கொட்டிலிருந்து மேய்ச்சலுக்காகத் திறந்து விட்ட சுந்தர்ராஜன். “பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின் வெள்ளைன்ற ஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டைவளர்க்கற மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு, தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் செளரியமானது இந்த ஆடு. பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான்வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப் போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு நல்ல ஜாதிநாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி பேத்தி விளையாடறதுக்கு ஆகட்டுமேனு ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன். ஆனா, நாளடைவுல இதையே பெரிய அளவுல வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்” என்று பெருமிதத்தோடு ஒருஆட்டுக்குட்டியைத் தடவிக் கொடுத்தார்.
தற்போது 57 வயதாகும் சுந்தராஜன், கோவையில் பத்து ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்துப் போகவே சட்டப் பணிக்குமொத்தமாக, முழுக்குப் போட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, மனைவியோடு கைகோத்து முழுநேர விவசாயத்தில் இறங்கிவிட்டார்.
“அந்த ஆட்டைப் பிடிச்சுக்கிட்டு வந்தப்போ அது என்ன ரகம்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் பிடிச்சுப்போயிடுச்சு. அந்த சமயத்துலவீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருத்தர்தான் இதோட ரகத்தைச் சொல்லி, கேரளாவுல இருந்து இதுக்கு ஜோடியா ஒரு கிடாக் குட்டியை வாங்கிட்டு வந்து கொடுத்தார். அந்த ரெண்டு ஆடுதான் இன்னிக்கு நாப்பது ஆடுகளாபெருகியிருக்கு. இதுக்காக நான் தனியா கொட்டகையெல்லாம் அமைக்கல. ஏற்கெனவே காலியா கிடந்த கறிக்கோழிக்கொட்டகைக்கு உள்ளேயேதான் வளர்த்துக்கிட்டு இருக்கேன். அதிகபட்சம் ரெண்டரை அடி உயரம்தான் இதுங்க வளருதங்க. தீவனம், தண்ணியெல்லாம் குறைவாத்தான் எடுத்துக்குதுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி நல்லாவே இருக்கறதால, பெருசா எந்த நோயுமே வர்றதில்லை.பூச்சிமருந்துகூட கொடு்குறதில்லைனா பார்த்துக்கோங்க. காலையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் கால் கிலோ மக்காச்சோளத்தைக் கொடுத்து. தண்ணியையும் வெச்சுடுவோம். சாயங்காலம் மூணு மணி வாக்குலமேய்ச்சலுக்கு அனுப்புவோம். ஆறரை மணிக்குப் பிறகு திரும்பவும் அடைச்சுடுவோம்.
எந்த இலை, தழையையும் கழிக்கிறதில்லை. தென்னை ஓலை, தேக்கு இலைனு விட்டு வெக்காம சாப்பிட்டுட்டு, ‘கண்டதைத் தின்றால் குண்டன் ஆவான்ன்ற மாதிரி ‘கொழுகொழு’னு ஆயிடும். மேய்ச்சலுக்காகவேதட்டை, கொள்ளு, கம்புனு மாத்தி மாத்தி பயிர் பண்ணிடுவோம். மேய்ச்சல் முடிஞ்சதும் ஒரு தண்ணி பாய்ச்சுனோம்னா மறுதழைவு வந்துடும். ஆடுகளோட எருதான் அதுக்கு உரம்” என்று சுந்தரராஜன் நிறுத்த,தொடர்ந்தார் செண்பகவல்லி.
“ஆடுகளுக்குனு எயும் வெளியில வாங்குறதில்ல. இயற்கை முறையில் நாங்களே உற்பத்தி பண்ற மக்காச் சோளம், சவுண்டல்தான் தீவனம். வழக்கமா ஆடுக ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டி ஈனும். இந்தஆடுக, வருஷத்துக்கே ரெண்டு தடவை ஈனுதுங்க. அஞ்சு மாசத்துலேயே பருவத்துக்கு வந்துடுது. ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டிங்களை ஈனுது. தென்னந்தோப்பு வெச்சுருக்கவங்களுக்குகளை எடுக்குறதுக்கு இந்தவகை ஆடுகள் வரப்பிரசாதம்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லாச் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுதுக. நம்ம சீதோஷ்ண நிலைக்கு நல்லா தாங்கி வளருதுங்க இந்த ஆடுக” என்று தன் பங்குக்கு கலப்பின ஆடுகளின் பெருமையைச் சொன்னார்.
நிறைவாக வருமானம் பற்றிய பேசிய சுந்தராஜன், “கிடைக்கிற குட்டிகளில் சராசரியா பாதி அளவுக்கு கிடாக் குட்டிகளும் இருக்கு. நான் இந்த ஆடுகளைப் பெருக்கணும்னு நினைச்சு வளர்க்கறதால பெரியளவுலவிற்பனை செய்யலை. கிடாக்குட்டிகளை மட்டும் ஏழு மாசம் வளர்த்து வித்துடுவேன். ஏழு மாசத்துல இருபது கிலோ வரை எடை வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 125 ரூபாய்னு எடுத்துக்கறாங்க. இதுவரைக்கும் இப்படிஅஞ்சாறு கிடாக்களை கறிக்காக வித்துருக்கேன். வளப்புக்காக ஏழு ஜோடியை வித்துருக்கேன். இதெல்லாம் கழிச்சது போக, கையில நாப்பது ஆடுக இருக்கு. கசாப்புக் கடைக்காரங்க தேடி வந்து விலைக்கு கேட்டுக்கிட்டுஇருக்காங்க. இனிமேதான் விற்பனையைத் தொடங்கணும். எப்படி இருந்தாலும் பத்து பெட்டை, ஒரு கிடா வாங்கி விட்டோம்னா வருஷத்துக்கு நாப்பது குட்டி கண்டிப்பா கிடைக்கும்” என்றார் .

No comments:

Post a Comment