இனபெருக்கப்
பாரமரிப்பு
- இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
- வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
- பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
- குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
- சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
- சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
- சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
- சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
- சினை காலம் 145-150 நாட்கள்
No comments:
Post a Comment