Contact:

Farm Location: Thambiranpatty-Village,Keelakanavai-Post,Perambalur-Dist,Pin:621104.
Mobile:9600026269

EMail:sureshgoatfarm@gmail.com

YouTube:http://www.youtube.com/user/SureshDevarajFarm?feature=watch

Kuthirai Masal(Alfalfa) Seeds,Super Napier,C04,Ear Tag,Velimasal Seeds,kalyana murungai seeds Available for Sales

-Thalassery,Boer goat Available For Sales
-Rabbit Available For Sales
- Kadaknath Available For Sales
-Country Chicken Eggs/Chicks Available For Sales
-Goat,Rabbit and Country Chicken Training at our farm
-Hydroponic and Silage Making Training
-Goat Farm Management software for Free
-Sample Record Keeping Excel Sheet Free
-Shed Construction
-Goat Farm CDs and Materials Available for Free(Pls send your email id i will share all my documents)

I'm available all day at the Farm

Saturday, 25 April 2015

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

கால்நடைகளுக்கான முதலுதவிகள் :

1. கால்நடைகளுக்கான முதலுதவிகள்
2. எலும்பு முறிவு
3. கொம்பு முறிதல்
4. இரசாயன திரவங்களால் ஏற்படும் காயங்கள்
5. வயிறு உப்புசம்
6. அமில நச்சு
7. யூரியா நச்சு
8. நஞ்சுத் தன்மை
9. வெறிநாய் கடி
10. பாம்பு கடி
11. தொண்டை அடைப்பு
12. கருப்பை வெளித்தள்ளுதல்.
13. முதலுதவி பெட்டி
14. கேள்வி பதில்கள்
15. கேள்வி பதில்கள்

உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் முலம் அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும்.

கால்நடைகளுக்கான முதலுதவிகள் :

1. காயங்கள் - கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை சுத்தமான நீரில் நோய்க்கிருமி எதிரியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து கழுவ வேன்டும். சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து டிங்ச்சர் அயோடின் அல்லது சல்பர் துளை போடவும். பின் கால்நடை மருத்துவரை அணுகவும்.

உடலில் புண் இருந்தால் ஈ முலம் புழுக்கள் உண்டாகி காயத்தை ஆழமாக்கி விடும். இதற்கு கற்பூரத்தை பொடி செய்து வைக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயை புண்ணின் மீது தடவலாம்.

எலும்பு முறிவு
எதிற்பாராத விபத்தினால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்ப்படாத வகையில் மூங்கில், துணி கொண்டு கட்டுப்போட வோண்டும். பின்னங்கால் தொடை எலும்பு முறிவு ஆகியவற்றிற்கு மருத்துவம் செய்வது கடினம். எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஒருசேர இருப்பின் அந்த காயங்களுக்கு கட்டுப்போட கூடாது. உடனே மருத்துவரை அணுகவும்.



கொம்பு முறிதல் :

மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலோ அல்லது வெளியில் மேயும்போதோ கொம்பு முறிய வாய்ப்புண்டு. நுனிக் கொம்பு முறிதல் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவியபின் களிம்பு தடவலாம்.

இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிங்சர் பென்சாயின் ஊற்றவும். கொம்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஈரம் மற்றும் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காயம் பட்ட இடத்தில் துற்நாற்றம் ஏதேனும் வருகிறதா என கவனமாக கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உடனே மருத்துவரை அணுகவும்.

இரத்த கசிவு :

கைகளை சுத்தமான நீர் அல்லது சோப்பால் கழுவி விட்டு இரத்தம் வரும் இடத்தில் விரல்களை வைத்து அழுத்தி பிடிக்க வேண்டும். இரத்த கசிவு அதிகமாக இருந்தால் சுத்தமான துணி கொண்டு கட்டுப் போடலாம்.

தீக்காயம் :

கால்நடை கொட்டகைகள் தீப்பிட்டிப்பதால் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். கால்நடைகளின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தால் அடர்த்தியான போர்வை அல்லது சாக்கு பை கொண்டு போர்த்த வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீர் ஊற்றவும். கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்லவும்.

இரசாயன திரவங்களால் ஏற்படும் காயங்கள் :

இரசாயன திரவங்கள் உடம்பில் பட்டால் தோல், தசை முதலியன வெந்துவிடும். அமில வகைத் திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்புத் தண்ணீர் அல்லது சோடா உப்பு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

காரவகை திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எந்த வகை இரசாயனம் எனத் தெரியாவிட்டால் நிறைய சுத்தமான தண்ணீர் கழுவ வேண்டும்.

மின்சார அதிர்ச்சி :

கால்நடைகளின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தால் நினைவு இழத்தல் மற்றும் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு। சில வேளை காயங்கள் ஏற்படாலாம். கால்நடைகளுக்கு மின் தாக்குதல் ஏற்பட்டால் உடனடிக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். பின்பே அருகில் செல்ல வேண்டும். கால்நடை கொட்டகையில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மின் கம்பங்களிலோ அல்லது அதன் அருகிலோ கட்டுவதை கண்டிப்பாக தவிர்க வேண்டும்.



அதிக உடல் வெப்பத்தால் ஏற்படும் அதிர்ச்சி :

வெயில் காலங்களில் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாத காரணங்களினால் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வெப்ப அதிர்ச்சி ஏற்படும். எனவே கால்நடைகளை கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் நிழலில் கட்டிவைக்க வேண்டும்.

கோடைகாலத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் மேய்சலுக்கும் பிற வேலைகளுக்கும் அனுப்பலாம். வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மீது ஈரத்துணி மற்றும் பனி(ஐஸ்) கட்டிகளை வைத்து உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம்.

வயிறு உப்புசம் :

தீவனத்தை திடீரென மாற்றுவதாலோ அல்லது பயறுவகை தீவனத்தை அதிகமாக உட்கொண்டதாலோ வயிறு உப்புசம் ஏற்படலாம். இதற்க்கு கடலெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 250 மி.லி வாய் வழியே ஊற்ற வேண்டும்.

எண்ணெயுடன் சோப்புத்தண்ணீர் 60 மி.லி வாய் வழியாக கொடுக்கலாம். மருந்து ஊற்றும் போது புறை ஏற்படாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.

வயிறு உப்புசம் அதிகமாயின் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவைமட்டும் அல்லாமல் உள்வயிறு சுழன்று கொள்வது, புளித்த உணவை அதிகமாக உட்கொள்வது, உண்ட பின் அதிகம் தண்ணீர் குடிப்பது ஆகியவற்றாலும் வயிறு உப்புசம் ஏற்படலாம்.

அமில நச்சு :

மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர் ஆகியவற்றை அதிகமாக உண்பதால் இந்நச்சு பாதித்து கால்நடைகள் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே உயிர் சேதமடைந்துவிடும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனைத் தடுக்க மேற்கூறிய தீவனங்களை நன்கு வெயிலில் உலர்த்தி காயவைத்து கொடுக்க வேண்டும்.

மீந்து போன அரிசி – சாதம், அழுகிய வாழைப்பழம், தானியங்களை அதிகமாக உட்கொள்வதால் வயிறு உப்புசம் ஏற்படலாம். இதனால் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். இதற்கு 100 கிராம் சமையல் சோடாவை 500 மி.லி தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை கொடுக்கவும். உடனே கால்நடை மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வயிற்றுப் போக்கு மருந்து கொடுக்க வேண்டும்.

யூரியா நச்சு :

தவறுதலாக யூரியாவை மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் கலப்பதாலோ, அல்லது யூரியா உரமிட்ட வயலில் தண்ணீர் குடிப்பதாலோ யூரியா நச்சு ஏற்படலாம். வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரமப்படுதல், வலிப்பு ஏற்படுதல் ஆகியன முக்கிய அறிகுறிகள். முதலுதவியாக கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு வினிகர்( 2 முதல் 4 லிட்டர் வரை பிரித்து) கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம்.



நஞ்சுத் தன்மை :

கால்நடைகள் நஞ்சுத் தன்மையுடைய செடிகளையோ, பூச்சி மருந்துகளை எதிரபாரமல் உட்கொள்வதாள்லோ, பூச்சி கொல்லி மருந்து டப்பாக்களை நாக்கினால் நக்குவதாலும் மற்றும் பூச்சி மருந்து தெளித்த பயிரை உட்கொள்வதாள்லோ உடம்பில் நஞ்சுத் தன்மை ஏற்படலாம்। அச்சமயம் வயிறு உப்புசம், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு, நினைவிழப்பு ஏற்பட்டு இறப்பு நீகழ வாய்ப்புண்டு.

முதலில் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். நஞ்சு வயிற்றில் தங்காமல் இருக்க சோப்புக் கரைசல் அல்லது உப்புக் கரைசலை வாயின் வழியாக கொடுக்கலாம். அடுப்புக் கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றலாம்.

வெறிநாய் கடி :

எல்லா வெப்ப ரத்த விலங்குகளுக்கும் இந்நோய் வரும். இவ்வியாதியுள்ள ஒரு விலங்கின் உமிழ் நீரில் கருமி வெளியேறுகிறது. வியாதியுள்ள விலங்கு கடித்தாலோ அல்லது ஒன்றாய் உள்ள விலங்கின் உடம்பில் ஏதேனும் புண்ணிருந்து அதை நக்கினாலோ இக்கிருமி உடம்புக்குள் புகுந்துவிடும். அந்த சதைபகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து நரம்பு வழியாக தண்டுவடம் மற்றும் மூளையை அடைகிறது. 10 நாள் முதல் 7 மாதத்திற்குள் நரம்பு நோய் வந்து மரணம் அடையும்.

இதன் அறிகுறிகள் கண்டவரை எல்லாம் கடிக்க வரும், கண்ணில் பட்டதையெல்லாம் தின்ன முற்படும், கீழ்தாடை தொங்கும். உமிழ் நீர் நூலாய் வழியும். சில நாட்கள் கழித்து உறுப்புகள் செயலிழந்து அமைதியாகிவிடும். இவ்வியாதியுள்ள விலங்கினை தனியே அடைத்துவிடவும். கையுரை அணியாமல் விலங்கினை தொடக்குடாது. கடிபட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி விட்டு உடனே மருத்துவரை அணுகவும். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போடப்படும்.

பாம்பு கடி :

பாம்பு கடி என்றால் ரத்தப் போக்கை கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டுவிடலாம். காயத்தை சுத்தப்படுத்தி கட்டுப்போட வோண்டும். பாம்பு கடி என்பதன் அறிகுறிகள் நிற்க முடியாமல் கீழே விழுதல், எழவும் முடியாது. வாந்தி, . உமிழ் நீர் வழியும், மூச்சுவிட சிரம்ப்படும். சிறுநீரில் இரத்தம், காயத்திலிருந்து தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடனே மருத்துவரை அணுகவும்.

தொண்டை அடைப்பு :

மாடு அல்லது ஆட்டின் தொண்டையில் ஏதாவது அடைத்துவிட்டால் கையை அல்லது விரலை விட்டு எடுத்துவிடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கை கிழே அழுத்திக் கொண்டு வாயிக்குள் இடுக்கி கொண்டு அடைப்பை எடுத்துவிடலாம். உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். கவனிக்காவிட்டால் மாடுகள் 4 அல்லது 5 மணி நேரத்தில் இறந்துவிடும்.

கருப்பை வெளித்தள்ளுதல் :

சில மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்திலோ அல்லது கன்று ஈன்ற பின்போ கருப்பை வெளியே வாய்ப்புண்டு। இதனைத் தடுக்க ஒரே சமயத்தில் அதிக தீவனம் அல்லது தண்ணீர் கொடுக்க கூடாது. மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின் புறம் சற்று உயரமாகவும், முன் புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். கருப்பை வெளியே தள்ளப்பட்டால் மண் மற்றும் தூசுகள் படாமல் இருக்கவும், உலர்ந்துவிடாமல் இருக்கவும் சுத்தமான ஈரத்துணியை போர்த்தி வைக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.



முதலுதவி பெட்டி :

விபத்துகள், நோய்கள் என்பவை முன் அறிவிப்பின்றி வருவது। எனவே அவசர உதவிக்காக முதலுதவி பெட்டி ஒவ்வொரு கால்நடை பராமரிபாளர் வீட்டிலும் இருக்க வேண்டும். அதில் இருக்க வேண்டிய மருந்துகள் பின்வருமாறு,

* கட்டுத் துணி, கயிறு, பஞ்சு, ஒட்டுப் பட்டை(பிளஸ்திரி)

* டெட்டால் அல்லது சாவ்லான், கத்தரி கோல்

* டிங்க்சர் அயோடின், பீட்டாடுன் கலவை, டிங்க்சர் பென்சாயின்

* கையுறை, வெள்ளை துணி,

* பாராசிட்டாமால், அவில், பெரிநார்ம், அனால்ஜீன் மாத்திரைகள் அல்லது ஊசிகள்.

* திசு காகிதம், வெப்ப மானி, டார்ச் லைட், பேனா, வெள்ளை தாள், சங்கிலி போன்றவை

முதலுதவி மட்டும் செய்து முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.

ஆதாரம் : கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்



கேள்வி பதில்கள் :

1. மாடு பசும்புல் சாப்பிட்டால் கழிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?

ஏற்கனவே குடல் புழு நீக்கம் செய்திருந்தால் சானத்தை எடுத்து மருத்துவரிடம் காண்பியுங்கள். இல்லை என்றால் குடல்புழு நீக்கத்துக்கான மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.

2. கறவை மாட்டுக்கு மடிவீக்கம் இருக்கிறது? இதற்கு என்ன மருத்துவம் செய்யலாம்? எப்படி தவிர்ப்பது?

மாட்டை ஈரத்தில் கட்ட வேண்டாம். கட்டுத்தரையை சுத்தமாக வைத்திருங்கள். பால் கறக்கும் முன்பும், பின்பும் மடியை சுத்தம் செய்யுங்கள். மடி வீக்கம் இருக்கும் போது மஞ்சள், வேப்பம் கொழுந்து, கல் உப்பு மூன்றையும் அரைத்து தடவி விடுங்கள்.

3. மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?

டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.

4. பசு குறைமாதத்திலேயே கன்று ஈன்று விடுகிறது. பாலும் குறைவாகவே இருக்கிறது. இதனைத்தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

பக்கத்தில் இருக்கும் மாடுகளுக்கு ஏதாவது வியாதிகள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். அபார்ஷன் இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. பக்கத்தில் உள்ள மாடுகள் முட்டி இருந்தால் இருந்தால் கூட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கால்நடை மருந்துக்கடைகளில் கால்சிமாஸ்தி என்று திரவ மருந்து இருக்கிறது. அது 5 லிட்டர் அல்லது ஒரு லிட்டர் என அளவில் விற்கிறார்கள். அதனை வாங்கி தினமும் 100 மில்லி கொடுக்கவும். படிப்படியாக பால் உயரும். அடுத்த தடவை சினை ஊசி போடும் போது கற்பப்பையை கழுவி ஊசி போட சொல்லுங்கள்.



கேள்வி பதில்கள் :

கேள்வி : பால் மாட்டிற்கு காம்பில் கொப்பளம் அதிகமாக இருக்கிறது?

பதில் : காம்பில் கொப்பளம் உள்ளது. "மாட்டு அம்மை” (cow pox) என்று உறுதி செய்து கொள்ளவும். அப்படி இல்லையெனில் பால் கறந்து முடிந்த பின்பு போரிக் ஆஸிட் பவுடருடன் தேங்காய் எண்ணெய் கலந்து தொடர்ந்து தடவி வரவும். கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்மூன்றைம் அரைத்து காம்பில் தடவலாம். மேலும் பால் கறப்பதற்கு முன்பு நன்றாக காம்பினை கழுவிய பின் பால் கறக்கவும்

கேள்வி : பசு மாட்டுக்கும், ஆட்டுக்கும் மழைக்காலத்தில் நோய் வந்தால் என்ன மாதிரியான கை வைத்திய முறையை கையாளலாம்?

பதில் : மழைக்காலத்தில் கழிச்சல், வாய் கோனாய், கால் கோமாரி, வாய் கோமாரி வந்தால் பூவன்பழம் 3-4 பழத்தை விளக்னெண்ணெய் அல்லது தோங்காய் பூ வை வெல்லம் கலந்து வாயில் கொடுத்து விடலாம். காலில் குளம்பில் புண் இருந்தால் வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சளை சேர்த்து அரைத்து, மாட்டின் காலை நான்கு கழுவி தேய்த்து விட வேண்டும்.மழைக்காலத்திற்கு முன்பாகவே, உரிய தடுப்பூசி போடுவது நல்லது. நோய் வந்த பின்பு, எக்காரணத்தைக் கொண்டு தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.

கேள்வி : ஆறு மாத கன்று குட்டிக்கு அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது? எப்படி நடுக்கத்தை நிறுத்துவது?

பதில் : பாண்டிகைண்ட் என்ற மருந்து இருந்து இருக்கிறது. ஒரு மருந்தை வாங்கி அதில் பாதியை ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்து விடுங்கள். மீதி இருப்பதை பதினைந்து நாளுக்கு பின்னர் கொடுக்கவும். தீவனம் நல்ல கொடுங்கள். ஒரு மாதத்துக்கு ஒரு முறை கொடுங்கள்.

No comments:

Post a Comment