கறவை மாடுகளில் மடி நோய் Mastitis in Cow
மடி நோயினால் அதிகமான வருவாய் இழப்பு எப்படி ?
- பால் பண்ணைகளில் அதிக வருவாய் இழப்பு ஏற்படுத்த கூடிய காரணிகள் மடி நோய் மிக முக்கியமானதாகும்.
- மடி நோயின் போது மருத்துவ செலவு மற்றும் பால் உற்த்தி இழப்பு போன்றவற்றால் மொத்தமாக ரூ.3000 முதல் ரூ.5000 வரை வருமான இழப்பு ஏற்படுகிறது.
- மடி நோய் என்பது கிருமிகள் காம்பின் துளை வழியாக உள்ளே சென்று மடியின் பால் சுறக்கும் திசுவில் நோயை உண்டாக்குகிறது.
- கிருமிகள் உள்ளே நுழைய பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை
- அதிகம் பால் கறக்கும் பசுக்களின் காம்பு துளைகள் பொதுவாக பெரிதாக இருக்கும். அத்துளைகள் பால் கறந்த உடனே மூடுக்கொள்ள தொடங்கும். இது சுமார் 5 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும். இக்கால கட்டத்தில் தான் கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. உள்ளே சிறுதளவு கிருமிகள் சென்றால் அதை பசுவின் நோய் எதிர்ப்பு சக்தி அழித்துவிடும். ஆனால் அசுத்தமான மற்றும் சேறான தரையில் வளர்ப்படும் பசுக்களில் உள்ளே செல்லும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும. இதை பசுவின் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்பட்டு நோயை உண்டாக்கும்.
- பசுவின் காம்பு துளை சில பசுக்களின் இயற்கையாகவே பெரிதாக இருக்கும்.
- முதல் கட்டத்தில் பால் நீர்த்தது போல் இருக்கும். இதை கண்டுபிடிப்பது சற்று கடினம். இதை மற்ற காம்பில் பால் கறந்து ஒப்பிட்டு கண்டுபிடிப்பது எளிது. இக்கட்டத்தில் பசுவிற்கு மருத்துவம் செய்தால் ரொம்ப நல்லது.
- இரண்டாம் கட்டத்தில் ( அதவாது முதல் கட்டம் ஆரம்பித்து 3- 5 மணி நேரம் கழித்து ) பால் திரி திரியாகவும் கட்டி கட்டியாகவும் இருக்கும். மற்றும் அந்த பக்கத்து மடியானது வீங்கியும் , சூடாகவும் , கெட்டியாகவும் இருக்கும்.
- மூன்றாம் கட்டத்தில் பால் வெள்ளையாக இல்லாமல் தண்ணீர் போல மங்கலான நிறத்தில் இருக்கும்.
- சில கிருமிகளால் ஏற்படும் மடிநோயானது ரொம்ப ஆபத்தானது. அதை கண்டுபிடிப்பது எளிது. நோய் தாக்கிய 2-4 மணி நேரத்தில் ஒரு பக்க மடியானது அதிகமான வீக்கத்துடனும் பாலானது நிறம் மாறி கலங்கலான தண்ணீர் போல இருக்கும். பசு தீவனம் எடுக்காமல் காய்ச்சலுடன் காணப்படும். இந்த மாதிரி பசு நோய்வாய்படும் போது உடனே காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைக்கும் மருத்துவம் செய்யவேண்டும். இல்லையேன்றால் பல நேரங்களில் பசுக்களின் இறப்பு அதிகமாக இருக்கும்.
கண்டறிதல் :
- மடி வீக்கமாகவோ அல்லது பால் நிறம் மாறியோ அல்லது நீர்த்து காணப்பட்டலோ உடனே கால்நடை மருத்துவரை ஆலோசிக்கவும்.
- உடனே மருத்துவம் ஆரம்பிக்கவேண்டும். காலம் தாழ்த்துவதால் பாதிப்பு அதிகமாகுவது மட்டுமல்லாமல் சிகிச்சையால் சரியாவது காலம் தாமதமாகும்.
தடுப்பு முறைகள் :
- பால் கறந்த 15 நிமிடங்களுக்கு பசுக்களுக்கு பசுந்தீவனம் அளித்தால் , கீழே படுப்பது குறைந்து கம்பின் துளைவழியாக கிருமிகள் உள்ளே செல்வது குறையும்.
- பசுக்களுக்கு சரிவிகித தீவனம் மற்றும் தாது உப்புகள் சரியான அளவில் அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்காலம்.
- பசுக்களின் கொட்டகைகளை சுத்தமாகவும் கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்யவேண்டும்.
ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making
- பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
- முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
- இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
- தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
- ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.
செய்முறை
- மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை, கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
- ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
- அளவு - 1 மீ x 1மீ x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
- குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.
- தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).
- பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
- ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
- பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.
- ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
- குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.
- மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
- நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.
- இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
- 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.
- ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.
No comments:
Post a Comment